logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா...?

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் மருதுபாண்டியம்மாள் (வயது 28).
இவருக்கு ஒரு மகனும்உள்ளார்.
இவர் சொக்கலிங்கபுரம் அரசு பள்ளியில் காலை உணவுதிட்ட அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் விபத்து ஒன்றில் கணவர் இறந்ததுவிட்டதாக கூறப்படுகிறது.அதனை அடுத்து இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தின் கீழ் தன்னார்வல ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார். சோழவந்தான் பகுதியை சேர்ந்த மந்திரமூர்த்தி (வயது 45)என்பவர். இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தின் தலைமை ஆசிரியராக உள்ளார்.இவர் பாண்டியம்மாளின் தொலைபேசி எண்ணிலும், வாட்சப்பிலும் ஆபாசமான குறுந்செய்திகள், ஆபாச புகைப்படம் மற்றும் ஆபாச வீடியோ போன்றவற்றை அனுப்பி பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது.ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் இதுகுறித்து ஆசிரியரை தொலைபேசியில் அழைத்து பேசியபோது கணவர் இன்றி வாழும் உனக்கு உணர்ச்சிகள் வருவதில்லையா...? அப்படி ஏதாவது வந்தால் என்னை தாராளமாக அழைக்கலாம் நான் உனக்கு உதவ தயாராக உள்ளேன் என ஆபாசமாக கூறியுள்ளார். இதுகுறித்து பாண்டியம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்ததை அடுத்து ஆதாரங்கள் இருந்தால் தானே புகார் அளிப்பாய் என தான் அனுப்பிய குறுந்செய்திகள் அனைத்தையும் வாட்சப்-பில் இருந்து அகற்றியதுடன் தனது நெருங்கிய நண்பர்களான ஜோயல் மற்றும் மோகன் என்னும் பரமசிவம் ஆகிய உடன் பணியாற்றும் இரு ஆசிரியர்களை அனுப்பி இதுகுறித்து புகார் அளிக்கவேண்டாம் இதனால் ஆசிரியரின் பணிக்கும் உன்னுடைய பணிக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறியதுடன் நஷ்டயீடாக ஏதேனும் பணம் தருவதாகவும் இதனை பெருசுபடுத்த வேண்டாம் எனவும் இத்துடன் இதனை மூடிமறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.இதனால் ஆவேசமடைந்த பாண்டியம்மாள் மதுரை பெண்னுக்கு உயிரைவிட பெருசு மானம் மட்டும்தான் களங்கம் ஏற்பட்டதால் மதுரையையே எரித்த கண்ணகி பூமி எங்கபூமி எனகூறியுதுடன் உடன் பணியாற்றும் ஆசிரியைக்கே இந்தநிலை என்றால் உங்கள் வகுப்பறையில்பயிலும் மாணவிகளின் நிலைஎன்ன..? எனக்கூறி யார் எதிர்த்தாலும் புகார் அளிப்பதை தடுக்க இயலாது என தெரிவித்துள்ளார்.உனக்கு தரவிருக்கும் பணத்தில் 20சதவீதம் தூக்கி எறிந்தாலே போதும் உன்னால் முடிந்தால் வழக்குப்பதிவு செய்து உள்ளே வை பார்க்கலாம் என சவால் விட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து காலம் கடத்த வேண்டாம் என நினைத்த பாண்டியம்மாள் சமூக ஆர்வலரின் உதவியுடன் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது காவல்ஆய்வாளர் ராதாமகேஷ் என்பவர் சாதாரண மெசேஜ் அனுப்பியதற்கு வழக்குபதிவு செய்ய இயலாது.
வேறு ஏதாவது பெரிய அளவில் நடதுள்ளதா..? என்னும் குறுக்கு கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது. அத்துடன் புகார்மனு மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
நடவடிக்கை எடுக்க மறுப்பதின் பின்னணி என்ன...? என்பது குறித்து பாண்டியம்மாள் என்னும் ஆதாரவற்ற பெண்ணிற்காக உதவி செய்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் இதில் காவல் துறை மெத்தனம் காட்டி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

126
9051 views

Comment