பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: செங்கல்பட்டு, சேலம் மாணவிகள் முதலிடம்; கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 10) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டார். tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தரவரிசைப் பட்டியலை அங்கு தெரிந்து கொள்ளலாம்.பொதுப் பட்டியலில் செங்கல்பட்டைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி என்ற மாணவி 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். நெல்லையைச் சேர்ந்த நிலஞ்சனா இரண்டாம் இடம், நாமக்கல்லைச் சேர்ந்த கோகுல் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். அதே போல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு மதிப்பெண் பட்டியலில் சேலம் மாணவி ரவணி முதலிடம். கோவை மாணவி கிருஷ்ணா அனூப் இரண்டாம் இடமும், வேலூரைச் சேர்ந்த மாணவர் சரவணன் மூன்றாம் இடமும் பிடித்தனர். பொறியியல் கலந்தாய்வு வரும் ஜூலை 22 முதல் செப்.11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது