
ஷிவ் நாடார் ஃபவுண்டேஷனால் நடத்தப்பட்டு வரும் ஷிவ் நாடார் பல்கலை சென்னை வளாகத்தில் ‘ஷிவ் நாடார் ஸ்கூல் ஆஃப் லா’ புதிதாகத் தொடங்கப்படுகிறது.
சிவ நாடார் பல்கலைக்கழகத்தில் ' 5 ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்ட படிப்பு' அறிமுகம்*
ஷிவ் நாடார் ஃபவுண்டேஷனால் நடத்தப்பட்டு வரும் ஷிவ் நாடார் பல்கலை சென்னை வளாகத்தில் ‘ஷிவ் நாடார் ஸ்கூல் ஆஃப் லா’ புதிதாகத் தொடங்கப்படுகிறது. 2024 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவிருக்கும் இப்பள்ளி, 5 ஆண்டுகள் காலஅளவு கொண்ட பிஏ. எல்எல்பி கல்வித் திட்டத்தை வழங்கும். இந்திய பார் கவுன்சிலின் ஒப்புதல் பெற்ற இந்த சட்டப்பள்ளியில் உலகளவில் புகழ்பெற்ற முதன்மையான பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் மற்றும் உலகத்தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளும் இடம்பெறுகின்றன. கூடுதலாக, ஆசிரியர் குழுவில் 20 சதவிகித நபர்கள் சட்ட – நீதித்துறையில் தீவிரமாக செயல்படும் வழக்கறிஞர்களாக இருப்பார்கள் மற்றும் இப்பள்ளியின் இடஅமர்வு குழுவினர் தொழில்துறை அனுபவம் கொண்டவர்களாக இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். புதிதாகத் தொடங்கப்படும் இக்கல்வித் திட்டத்தின் முதல் பேட்ச்சில் 60 மாணவர்கள் வரை சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சேரவிரும்பும் விண்ணப்பதாரர்கள் https://apply.snuchennaiadmissions.com/application-form-for-school-of-law என்பதில் பதிவு செய்யலாம். இக்கல்வித் திட்டத்தில் சேர பதிவு செய்வதற்கான இறுதி தேதி 2024, ஜுலை 10 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
பரந்த விரிந்த பசுமையான நிலப்பரப்பாகத் திகழும் ஷிவ் நாடார் பல்கலை சென்னை வளாகத்தில் ஷிவ் நாடார் ஸ்கூல் ஆஃப் லா நிறுவப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி வசதிகளும் மற்றும் கல்வியையும், அறிவையும் சிறப்பாக ஊக்குவிக்கும் வகையில் நன்கு அமைக்கப்பட்டுள்ள நூலகமும் இங்கு இடம்பெறுகிறது. அறிவு சார்ந்த ஆராய்ச்சிக்கும், புத்தாக்க முயற்சிகளுக்குமான முதன்மை மையமாக அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் SNU சென்னை வளாகம் பெற்றிருக்கிறது. இங்கு அமைகின்ற ஷிவ் நாடார் ஸ்கூல் ஆஃப் லா, இந்தியாவின் மிகச்சிறந்த சட்ட தொழில்முறை பணியாளர்களையும், வழக்கறிஞர்களையும், சட்ட கல்வியாளர்களையும் வளர்த்து உருவாக்கும் கல்விப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அதற்கான தயார்நிலையில் இருக்கிறது.
ஷிவ் நாடார் பல்கலை சென்னையின் துணை வேந்தர், புரொஃபசர் ஸ்ரீமன் குமார் பட்டாச்சார்யா இது தொடர்பாக கூறியதாவது: “சட்டத்தில் ஆர்வமும், விருப்பமும் கொண்ட மாணவர்களை உலகத்தரம் வாய்ந்த வழக்கறிஞர்களாகவும், சட்டத்துறையில் நிபுணர்களாகவும் வளர்த்து உருவாக்குகின்ற ஷிவ் நாடார் ஸ்கூல் ஆஃப் லா – ஐ தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைகிறோம். விரிவான, ஆழமான அடித்தளத்தையும் மற்றும் வெற்றிகரமான கரியருக்கு அவசியமான பல்வேறு திறன்களையும் மாணவர்கள் உருவாக்கிக்கொள்வதை உறுதிசெய்ய உலகளவில் சிறந்த செயல்முறைகளைச் சார்ந்து பிஏ. எல்எல்பி பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சட்டப்பிரச்சனைகளின் அதிகரித்து வரும் சிக்கல் மற்றும் சட்ட நுணுக்கங்களின் காரணமாக, தரமான சட்ட கல்லூரிகள் / பள்ளிகளின் பங்கு இதற்கு முன்பு இருந்திடாதவாறு மிக இன்றியமையாததாக உருவெடுத்திருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்கள் குழு உறுப்பினர்களிடமிருந்து சட்டத்தின் அடிப்படை அம்சங்கள், ஆழமான நுணுக்கங்கள் மற்றும் நடைமுறை சார்ந்த சட்ட விவகாரங்களில் வலுவான, விரிவான அறிவை ஒவ்வொரு மாணவரும் பெறுவதை உறுதிசெய்யும் குறிக்கோள் மீது நாங்கள் ஆழமான பொறுப்புறுதி கொண்டிருக்கிறோம்.”
ஷிவ் நாடார் ஸ்கூல் ஆஃப் லா – ன் டீன் மற்றும் பேராசிரியர் திரு. ஷிவ்பிரசாத் சுவாமிநாதன் கூறியதாவது: “சட்ட கோட்பாடுகளில் திறமையானவர்களாகவும், அறிவுக்கூர்மை மிக்கவர்களாகவும் திகழ்கின்ற வழக்கறிஞர்களின் புதிய தலைமுறையை உருவாக்குவது மட்டும் எமது இலக்கல்ல; வெற்றிகரமான சட்ட வாழ்க்கைப் பணிகளை உருவாக்கிக்கொள்வதற்கு தேவைப்படும் யதார்த்தமான நடைமுறை திறன்களையும் கொண்டவர்களாக அவர்களை வளர்த்தெடுப்பது எமது நோக்கமாகும். சட்டம் சார்ந்த உள்ளார்ந்த, ஆழமான அறிவுத்திறனை பெறுவது மீது ஷிவ் நாடார் ஸ்கூல் ஆஃப் லா சிறப்பு கவனம் செலுத்தும் மற்றும் அதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்தும். தற்போதைய மற்றும் எதிர்கால சட்ட சவால்களை திறம்பட கையாண்டு தீர்வுகாண தேவைப்படும் புதுமையான வழிமுறைகளில் மாணவர்கள் சிந்திக்குமாறும், குறுகிய கண்ணோட்டங்களை கடந்து பரந்துபட்ட சிந்தனைத்திறனை வளர்த்துக்கொள்ளவும் இப்பள்ளி மாணவர்களை ஏதுவாக்கும்.”
சேர்க்கை செயல்முறை: CLAT மற்றும் LSAT இந்தியா மதிப்பெண்களின் வழியாக அல்லது வகுப்பு 10 மற்றும் வகுப்பு 12-ன் மதிப்பெண்கள் / கிரேடுகள் வழியாக இப்பட்டப்படிப்பு திட்டத்தில் சேரவிரும்பும் நபர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம். பரிசீலனைக்குப் பிறகு குறும்பட்டியலில் இடம்பெறும் மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உதவித்தொகை:
• இந்திய மாணவர்களுக்கு: ரூ.3,95,000/-
• NRI/OCI மாணவர்களுக்கு: ரூ. 5,95,000/-
• வெளிநாட்டு மாணவர்களுக்கு: ரூ. 7,90,000/-
2024-ம் ஆண்டில் சேரும் மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கு நபர்களுக்கு முழு கல்விக்கட்டணத் தொகை தள்ளுபடி உட்பட, நிதிசார் ஆதரவை வழங்க ஒரு தாராளமான ஸ்காலர்ஷிப் / கல்வி உதவித்தொகை திட்டத்தையும் இப்பள்ளி வழங்கும்.
இன்டெர்ன்ஷிப் மற்றும் கரியருக்கான இடஅமர்வு: இங்கு கல்வி கற்று தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அவர்களது முதல் பணி வாய்ப்பிற்கு மட்டுமின்றி, வாழ்நாள் முழுதும் நீடிக்கின்ற நல்ல கரியருக்காக ஆதரவையும் மற்றும் ஆண்டு ரீதியிலான இன்டெர்ன்ஷிப் திட்டங்களையும், அதிக திறன் வாய்ந்த பணியிட அமர்வு குழு வழங்குவதால் மாணவர்கள் சிறப்பாக பயனடைவார்கள்.