வான்காய் சிட்டோரீயோ கராத்தே பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
கன்னியாகுமரி கராத்தே கழகம் சார்பில் மாநில கராத்தே போட்டி தேர்வு அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கன்னியாகுமரி வான்காய் சிட்டோரீயோ கராத்தே பள்ளி மாணவர்கள் 32 பேர் கலந்து கொண்டனர். இதில் 9 பேர் முதலிடமும், 13 பேர் இரண்டாம் இடமும், 18 பேர் 3-ம் இடமும் பெற்றனர். அவர்களை வான்காய் சிட்டோரீயோ தலைமை பயிற்சியாளர் கராத்தே ராஜ் மற்றும் துணைப் பயிற்சியாளர் முருகன் ஆகியோர் பாராட்டினர்.