logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தமிழகத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது குறிப்பாக தமிழகத்தில் பாஜக கூட்டணி, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என்கிற மும்முனைப் போட்டு ஏற்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் சீமானின் நாம் தமிழர் கட்சி இன்னும் பெறாமல் இருக்கிறது அக்கட்சி தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இன்று தமிழக பாஜக சார்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை அவர்கள் கோயம்புத்தூரில் போட்டியிடுகிறார். அதேபோல் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தென் சென்னை பகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் வினோஜ் பி செல்வம் அவர்களும், வேலூரில் டாக்டர் ஏசி சண்முகம் அவர்களும், கிருஷ்ணகிரியில் சீ நரசிம்மன் அவர்களும், பெரம்பலூர் தொகுதியில் பச்சமுத்து பாரிவேந்தரும், தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களும், நீலகிரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆ ராசாவை எதிர்த்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அவர்கள் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இரண்டாவது பட்டியலில் யாரெல்லாம் போட்டியிடப் போகிறார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ள மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

தற்போது தமிழகத்தில் கே அண்ணாமலை அவர்களுக்கு பெரும் செல்வாக்கு உள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதால் அவர் வெற்றி பெறுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

145
2701 views

Comment