logo

தமிழ்த்தேசியப் போராளி" “அருமை” தோழர் பா. பிரபாகரன் நினைவேந்தல் – படத்திறப்பு

"தமிழ்த்தேசியப் போராளி"
“அருமை” தோழர் பா. பிரபாகரன்
நினைவேந்தல் – படத்திறப்பு
==============================

“தமிழ்த்தேசியப் போராளி” - “அருமை” தோழர் பா. பிரபாகரன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, வரும் 11.02.2024 அன்று சிதம்பரத்தில் நடைபெறுகின்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்க சிதம்பரம் கிளையின் மூத்த தோழரும், “அருமை” தையலக உரிமையாளருமான தோழர் பா. பிரபாரன் அவர்கள், கடந்த 28.01.2024 அன்று மாரடைப்பால் திடீரென்று காலமானார். அவரது நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, வரும் ஞாயிறு (11.02.2024) காலை 10.30 மணிக்கு சிதம்பரம் பெரியார் தெரு - காத்தாப்பிள்ளை சந்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகின்றது.

நிகழ்வுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமை தாங்குகிறார். தோழர் கு. சிவப்பிரகாசம் (செம்மை வாழ்வியல் நடுவம்), ஆசிரியர் து. வேதரத்தினம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைத் தலைவர் தோழர் க. முருகன், தோழர் பிரபாகரனின் படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றுகிறார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர்கள் நா. வைகறை, கோ. மாரிமுத்து, மகளிர் ஆயம் சிதம்பரம் அமைப்பாளர் திருமதி. இரா. தில்லைக்கரசி, தமிழக உழவர் முன்னணித் தலைவர் தோழர் சி. ஆறுமுகம், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் முனைவர் வே. சுப்பிரமணிய சிவா ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்துகின்றனர்.

த.தே.பே. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் வேந்தன் சுரேசு நன்றி கூறுகிறார். தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர் தோழர் ஆ. குபேரன் நிகழ்வை ஒருங்கிணைக்கிறார்.

இந்நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் தமிழின உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

1
2055 views