கோயம்புத்தூர் அருகே பத்திரிகையாளர் மீது தாக்குதல் 03/06/2023 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் திவான்சாபுதூர் தாமரைக்குள
கோயம்புத்தூர் அருகே பத்திரிகையாளர் மீது தாக்குதல்03/06/2023 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் திவான்சாபுதூர் தாமரைக்குள சாலையில் நாளைய வரலாறு பத்திரிகை நிருபர் சுரேஷ்குமார் பயணித்துக் கொண்டிருந்த பொழுது கருங்கற்களை ஏற்றிக்கொண்டு இரண்டு டாரஸ் லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக அதிவேகமாக சென்றது இதனை அடுத்து வந்த டாரஸ் லாரியை அவர் வீடியோ பதிவு செய்தார்.இதை அறிந்த சம்பந்தப்பட்ட திவான்சாபுதூர் திமுகவில் பொறுப்பில் இருக்கும் சரவணன் என்பவர் ஷிப்ட் காரில் வந்து அவருடைய செல்போனை பறித்துக் கொண்டு பத்திரிக்கையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.அவரிடமிருந்து பத்திரிகையாளர் தப்பிக்க முற்பட்ட போது அவர் காரை வைத்து என்னை இடிப்பதற்காக துரத்தினார்.ஒரு வழியாக அவரிடமிருந்து பத்திரிக்கையாளர் தப்பித்து விட்டார். இதனை அடுத்து பத்துக்கும் மேற்பட்ட அடியாக்களுடன் பத்திரிக்கையாளரை தாக்க வந்தார்.ஒரு வழியாக பத்திரிக்கையாளர் தப்பித்து விட்டார் இது சம்பந்தமாக நேற்று ஆனைமலை காவல் நிலையத்தில் பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார்.பத்திரிக்கை துறையில் இருக்கும் அவரை செய்ய விடாமல் என் செல்போனை புடுங்கி அடித்து காரில் துரத்தி கொலை செய்ய முற்பட்ட சரவணன் முறையாகத்தான் கருங்கற்களை எடுத்துச் செல்கிறார் என்றால் ஏன் இந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் ...?சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் துணையோடு தான் இது நடைபெறுகிறதா ...?இதில் யார் யாருக்கெல்லாம் பங்கு உள்ளது ..?என்ற கேள்விகள் எழுகின்றன.நீதி கேட்டு நீதியின் வாசலில் நிற்கிறார்.நீதி கிடைக்குமா..? பணம் பேசுமா...?