பசுமை கும்மிடிப்பூண்டி இயக்கம் துவக்கம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ
எஸ்.விஜயகுமார் சார்பில் ஓராண்டில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடும் பசுமை கும்மிடிப்பூண்டி திட்டம் துவக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமார் கும்மிடிப்பூண்டியில் அதிகரித்துள்ள சுற்றுச்சூழல்
மாசை கட்டுப்படுத்தும் நோக்கில், கும்மிடிப்பூண்டியில் அதிக அளவு மரக்கன்றுகளை நடும்
பசுமை கும்மிடிப்பூண்டி திட்டத்தை உலக சுற்றுச்சூழல் தினத்தில் துவக்கி வைத்தார்.
நிகழ்வை ஒட்டி கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் தவெக எம்எல்ஏ எஸ்.விஜயகுமார் சார்பில் 10 அடி உயரமுள்ள 3 ஆண்டுகள் வளர்ந்த மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கஜலட்சுமி, தவெக மாவட்ட பொருளாளர்
ஜி.கிருபாகரன், மாவட்ட துணை செயலாளர் ஹரி, தவெக ஒன்றிய செயலாளர்கள் அருண், அன்புமலர், ஜோதி, அசோகன், நகர செயலாளர் பழனி, தவெக நிர்வாகி என்.எஸ்.ஆர்.நிஜாம் முன்னிலை, அரிமா சங்க நிர்வாகி தொழிலதிபர் கிளமெண்ட் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்பின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமார் முதல் மரக்கன்றை நட்டார். பின் தவெக ஒன்றிய நிர்வாகிகள் சார்பிலும், பிற அணிகள் சார்பிலும் தனித்தனியாக மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமார், கும்மிடிப்பூண்டி ஓராண்டில் சுற்றுச்சூழல் மாசை குறைக்கும் நோக்கில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடும் பசுமை கும்மிடிப்பூண்டி திட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றும், ஒரு வாரத்தில் 3 நாட்கள் மரக்கன்றுகள் நடும் பணியில் தவெக நிர்வாகிகள் ஈடுபடவேண்டும் என அறிவுறுத்தியவர், தங்கள் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க விரும்பும் பொதுமக்கள் இது குறுத்து தன்னையோ தவெக ஒன்றிய செயலாளர்களையோ தொடர்பு கொள்ளலாம் எனவும்
தெரிவித்தார்.