TVK தலைவருக்கு ஆளுநர் ஆட்சி அமைக்க மறுப்பு
08/05/2026 இன்றைய தினம் காலை 11 மணியளவில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில்,
இந்திய அரசியலமைப்பின்படி , தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக தலைவரை,ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க மறுக்கும் தமிழக பொறுப்பு ஆளுநர் மேதகு அர்லேக்கர் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து .
கலைப்பிரிவின் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் டாக்டர் ஆர் எஸ் கே துரை MA BL DD தலைமையில் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் SC துறை மாநில செயலாளர் நல்லூர் நாயகன் கே எஸ் கணேசன்,INTUC செயலாளர் சங்கை கண்ணன்,மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சிவராமகிருஷ்ணன்,மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வேண்டும் ,வேண்டும் சட்டமன்றம் வேண்டும்!. வாழட்டும் , வாழட்டும் ஜனநாயகம் வாழட்டும்!, காப்போம், காப்போம் அரசியலமைப்பை காப்போம் !, ஒழிப்போம் , ஒழிப்போம் அடக்கு முறையை ஒழிப்போம் !!. என்று கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட தருணம்.