கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று முன்தினம் திமுக வேட்பாளருக்கு வைகோ பிரச்சாரம்...
20/04/2026 அன்று தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியான SV கரை,ஆய்க்குடி, அகர கட்டு,இலத்தூர் ,சிவநல்லூர், பார்டர், செங்கோட்டை ஆகிய கிராமங்களுக்குச் சென்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதிமுக வெற்றி வேட்பாளரான தி.மு.ராஜேந்திரனுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு திரு வைகோ அவர்கள் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.இந்த தேர்தல் பரப்புரையில் மாலை ராஜா Ex MLA, சதன் திருமலை குமார் எம் எல் ஏ,காங்கிரஸ் கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் Dr. R.S.K.துரை,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி துறை மாநில செயலாளர் நல்லூர் நாயகன் கே.எஸ் .கணேசன்,மதிமுக மாவட்ட பெரும் தலைவர் சுப்பிரமணியன் , மதிமுக மாவட்ட அவை தலைவர் சக்தி வடிவேலன்,எஸ் வி கரை நகர காங்கிரஸ் தலைவர் பூக்கடை முருகன்,செங்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் ராஜீவ்,அச்சம்பட்டி செல்லையா பாண்டி ,விசிக கடையநல்லூர் நகர செயலாளர் E. பாக்கியநாதன்,ஆய்க்குடி முருகதாஸ்,காசி தர்மம் திருமலை குமார் ,விசிக கடையநல்லூர் நகர துணை செயலாளர் எஸ் தில்லை நடராசன் , செங்கை காங்கிரஸ் முருகையா MC ,கடையநல்லூர் உசேன் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பொதுமக்களுடன் வாக்கு சேகரித்தனர்.