logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

வடாரண்யேஸ்வரர் கமலத் தேர் ஊர்வலத்தில் அரோகரா கோஷம் வின்னை முட்ட திடீரென ஒலித்த காடுவெட்டி ஜெ குரு பெயர்



திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் உப கோவில் வடாரண்யேஸ்வர சுவாமி ஆலயம் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர பெருவிழா சுமார் பத்து நாட்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் வகையில் கொடி 22/03/2026 அன்று ஏற்றப்பற்று விழா தொடங்கப்பட்டது இதில் வன்னியர் சமுதாயத்தின் சார்பாக 28/03/2026 அன்று கமலத் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம் இவ்வகையில் காலை சுமார் பத்து முப்பது மணி அளவில் தேரோட்டமானது தேர் நிலையில் இருந்து தொடங்கப்பட்டது தேருக்கு முன்பாக ஏழு புனித குடைகள் செல்ல அதற்கப்பின் சிவபெருமான் பார்வதி பத்திரகாளி காரைக்கால் அம்மையார் வேடமே அணிந்த நபர்கள் ஆக்ரோஷமாக ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டே இருந்தனர் இதை பார்த்ததும் பக்தர்கள் ஒரு கணம் சிவபெருமானே நேரில் தோன்றி நடனமாடி காட்சி தத்ரூபமாக இருந்தது மங்கள வாத்தியங்கள் கைலாய வாத்தியங்கள் சிறு குழந்தைகள் முதற்கொண்டு வாசித்து பிரம்ப்பில் ஆயத்தினர் பக்தர்களை கமலத் தேரின் வளம் பிடித்து இழுத்துக் கொண்டே அரோகரா என்ற கோஷங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு அதிர்ந்தன இதில் வன்னியர் குல சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்கள் சிலர் வீரப்பனார் புகைப்படத்தை அணிந்த ஜெர்சி போட்டுக்கொண்டு பேண்ட் வாத்தியத்துக்கு மாவீரன் மறையவில்லை மண்ணுக்குள்ளே அவர் மலை போன்று நின்று விட்டார் எங்கள் மனதுக்குள்ளே என்று மாவீரர் காடுவெட்டி ஜெய் குரு வாழ்க அவர் புகழ் ஓங்குக என்று கரகோஷங்கள் எழுப்பினர் இதில் சக இளைஞர்கள் கண் கலங்கி நின்றனர் மாவீரன் மீது எவ்வளவு பற்றோடு இருக்கிறார்கள் என்பதை காண முடிந்தது சமூக ஆர்வலர்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் காலை முதல் மாலை வரை ஆயிரம் கணக்கான பக்தர்களுக்கு உணவளிப்பது நீர்மோர் குளிர்பானங்கள் என பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளனர் அறநிலையத்துறை சார்பில் ஏதேனும் உணவு அல்லது நீர்மோர் பந்தல்கள் அமைத்துள்ளதா என்று கேட்டபோது எதுவும் இல்லை வழக்கம் போல் சனிக்கிழமை 500 நபர்களுக்கு அன்னதானம் அதை தவிர எதுவும் செய்யவில்லை என்று தெரியவந்தது இதில் சில தனியார் தொண்டு நிறுவனங்களை செய்தால் கூட அதை அறநிலைத்துறை அதிகாரிகள் ஒரு சிலர் தடுத்து நிறுத்துவதாக தகவல் கிடைத்தது மாலை பத்ரகாளி அம்மன் கோவில் லிருந்து மீண்டும் தேர் நிலையத்திற்கு செல்ல இருந்த கமலா தேர் திருவாலங்காடு காவல் நிலையம் முன்பு காவல்துறைக்கு மாலை மரியாதை செய்ய வேண்டும் என்று கமல தேர் நிறுத்தும் போது காவல் நிலைய தடுப்பு சுவரின் முன்புற சக்கரம் மோதியது அப்போது வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் சிலர் காவல் துறை அதிகாரிகளை பார்த்து எத்தனை நாள் நாங்கள் சொல்லி இருக்கிறோம் இந்த செவுரு ஆக்கிரமத்து உள்ளீர்கள் இதை இடியுங்கள் என்று இப்போது பார்த்தீர்களா எவ்வளவு சிரமமாக உள்ளது சாமியை உள்ளே எடுத்துச் செல்ல என்று கூறியவுடன் அவர்கள் அதெல்லாம் இடிக்க முடியாதப்பா வேண்டுமென்றால் J.C. B கொண்டு கமலத்தேர் பின்புறமாக இழுத்து அப்புறமா எடுத்துச் செல்லுங்கள் என்றவுடன் கொந்தளித்தனர் இளைஞர்கள் ஆனால் அச்சமுதாயம் பெரியவர்கள் அவர்களை சாந்தப்படுத்தி இது நமது சாமி நம்ம ஊரு சாமியை முதலில் உள்ளே பத்திரமாக கொண்டு சேர்க்க வேண்டும் அதன் பிறகு இதெல்லாம் பேசிக்கலாம் என்று கூறியவுடன் அமைதியாக இளைஞர்கள் இருந்தனர் இதெல்லாம் தெய்வக்குத்தம் என்றனர் அங்கிருந்து பக்தர்கள் என்ன ஏது என்று விசாரித்து பார்த்த போது தான் தெரிய வருகிறது அறநிலை துறை இணை ஆணையர் செயல் அலுவலர் ரமணி அவர்களுடன் இருந்த அறநிலை துறை அதிகாரிகள் சிலர் காலணிகளை அணிந்து தேர் உள்ளே வரலாமா கமலா தேரின் வளம் இழுக்கலாமா பலமுறை ஒலிபெருக்கியில் சொல்லிக் கூட அவர்கள் இதே செயல்தான் செய்தார்கள் ஆகையால் தான் சிவபெருமானால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் நல்ல வேலை யாருக்கும் எந்த பாதிப்பும் ஆகவில்லை கோவில் அர்ச்சகர்கள் சரியான முறையில் வேதங்களும் பூஜைகளும் செய்வதாலே எல்லாம் வல்ல எம்பெருமான் பொறுத்து காத்தருகிறார் இல்லையென்றால் இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆணவத்தின் உச்சியில் உள்ள அதிகாரிகளுக்கு இறைவன் தண்டித்து விடுவார் இரவு 7 மணி அளவில் யாருக்கு எந்த அசம்பாவிதமும் நடக்காமல் பக்தர்களை காத்து அருள் வழங்கினார் அருள்மிகு வடாரண்யேஸ்வரர் வண்டார்குழலி அம்மன் ஓம் நமச்சிவாயா என்று மீண்டும் ஒருமுறை எழுப்பினர் பக்தர்கள் எதில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை தீயணைப்பு வாகனம் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

7
376 views

Comment