ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை!
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து களம்காண தயாராகயிருப்பதாக பிரிட்டன், பிரான்ள் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
நட்பு நாடுகளின் நலன்களை பாதுகாக்க ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவப் பயன்படும் தளங்களை அழிக்க தற்காப்புத் தாக்குதல்களை நடத்த தயார் என அந்த நாடுகள் அறிவித்துள்ளன. ஈரானின் பழிவாங்கும் ராணுவ நடவடிக்கைகளை முறியடிக்க அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மூன்று நாடுகளும் தங்கள் சொந்த நலன்களையும் தங்கள் நட்பு நாடுகளின் நலன்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவுவதற்கான, ஈரானின் திறனைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் இதில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஒப்புக் கொண்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.