logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

காமனெயியை பல மாதங்கள் வேவு பார்த்து துல்லியமாக தாக்கி கொன்ற அமெரிக்கா, இஸ்ரேல்

இரான் அதிஉயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்ட தாக்குதல் எதிர்பார்க்கப்பட்ட நள்ளிரவு நேரத்தில் அல்லாமல், காலை வேளையில் நடந்துள்ளது. ஏனெனில், அதற்கு சில மணிநேரத்திற்கு முன்பாக கிடைத்த முக்கியமான உளவுத்துறைத் தகவலை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவும் இஸ்ரேலும் முடிவு செய்திருந்தன. இரானிய மூத்த அதிகாரிகள் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பத்திற்காக பல மாதங்களாக அவர்கள் காத்திருந்தனர். அதிஉயர் தலைவர் அலி காமனெயி சனிக்கிழமை காலை மத்திய டெஹ்ரானில் உள்ள வளாகத்திற்கு செல்வார் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.
அதே சமயத்தில், மற்ற மூத்த ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் சந்திக்கும் இடத்தையும் தாக்க அவர்கள் முடிவு செய்திருந்தனர்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடந்த பல மாதங்களாக அதிஉயர் தலைவரின் நகர்வுகளை கண்காணித்து வந்தனர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய முறைகள் ரகசியமானவை என்றாலும் அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகப் பதிவொன்றில் அதுகுறித்து சூசகமாக குறிப்பிட்டுள்ளார். எங்களின் உளவுத்துறை மற்றும் மிகவும் நவீனமான கண்காணிப்பு அமைப்பை அவரால் (காமனெயி) தடுக்க இயலவில்லை." இது நேரடியாக ஒருவர் அளித்த தகவலாக இருக்கலாம். ஆனால் இரானிய தனிநபர்கள் குறித்து தொழில்நுட்ப முறையில் கண்காணித்ததன் மூலம் கிடைத்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரில் இரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளை இஸ்ரேல் குறிவைத்தது. அப்போது, தனிநபர்களின் நகர்வுகளை அறிய அவர்களின் தொலைத்தொடர்பு மற்றும் மொபைல்போன் சாதனங்களை ஊடுருவியதாக கூறப்படுகிறது.

0
66 views

Comment