தென்காசி ஸ்ரீ திரிகூட ராஜா துவக்கப் பள்ளி முப்பெரும் விழாவில் தமிழ் அறிஞர்கள் பங்கேற்பு...
20/02/2026 அன்று தென்காசி வீட்டு வசதி வாரியம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ திரிகூட ராஜா துவக்கப் பள்ளியின் முப்பெரும் விழாவில், பள்ளியின் செயலாளரும், தமிழ் இயக்கத்தின் மாவட்ட செயலாளருமான இலக்கியத் தென்றல் Dr.R.S.K. துரை தலைமையில் ,தமிழ் இயக்கத்தின் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பா. சிங்கராயன்,S.P. முரளி ராஜா, ஜான் தாமஸ், பள்ளியின் கல்வி குழு தலைவர் டி. டெய்சி துரை, மாவட்ட தமிழ் இயக்கத்தின் பொருளாளர் நல்லூர் நாயகன் K.S. கணேசன்,பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.