logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 10/02/2026.

10 /2/2026 (தை 27) செவ்வாய்க்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடியில் அமைக்கப்பட்ட டாடா ஆலையில் உற்பத்தியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗞️ தொகுதி பங்கீட்டு பேச்சு தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை

🗞️ தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்றுடன் நிறைவு: வரும் 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

🗞️ தவெகவின் பலம் என்ன என்று காங்கிரஸ் கணக்கெடுத்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா பேச்சு

🗞️ ரத்து செய்யப்பட்ட குரூப்-2 தேர்வுகள் மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு-டிஎன்பிஎஸ்சி தகவல்

🗞️ தங்களிடம் உள்ள ஆவணங்கள்படி அன்புமணியே பாமகவின் தலைவர்: தேர்தல் ஆணையத்தின் பதிவை பதிவு செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்

🗞️ திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு என்ன கவலை என்று செல்வப்பெருந்தகை கேள்வி

🗞️ முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட்,நடைமேடை டிக்கெட் என அனைத்து சேவைகளுக்கும் ரயில் ஒன் செயலியை பயணிகள் பயன்படுத்தலாம்-தெற்கு ரயில்வே அறிவிப்பு

🗞️ தமிழ்நாடு முழுவதும் கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்: 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகள் புறக்கணிப்பு

🗞️ நாடாளுமன்றத்தில் விவாதங்களை கண்டு பாஜக அரசு அஞ்சுவதாக ராகுல் காந்தி விமர்சனம்

🗞️ டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் முடிவு

0
99 views