logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 09/02/2026.

9/2/2026 தை 26 திங்கள்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ தூய்மை பணியாளர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட உணவுத் திட்டம்:தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கி வைக்கிறார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗞️ தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி,வினாத்தாள் வர தாமதத்தால் தமிழகத்தில் குரூப் 2, 2A மெயின் தேர்வு ரத்து

🗞️ டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக
வெங்கடப்பிரியா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்

🗞️ மே 3ஆம் தேதி நீட் தேர்வு: மார்ச் 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

🗞️ டாஸ்மாக் தொழிற்சங்கங்களில் தொடர் போராட்டம்: டாஸ்மாக் கடைகள் இன்று 3 மணி நேரம் இயங்காது

🗞️ அழும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பது போல, அரசு ஊழியர்களை திமுக அரசு சமாதானம் செய்துள்ளது- எடப்பாடி பழனிச்சாமி

🗞️ விஜயின் வருகை திமுக வாக்கு வங்கியைப் பாதிக்கும் டிடிவி தினகரன் கருத்து

🗞️ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்குகிறது

🗞️ சேலம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றியது தவெக தலைமை

🗞️ இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு.
வரும் 12-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் என விவசாயிகள் அறிவிப்பு

0
35 views