logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 12/01/2026.

12/1/2026 (மார்கழி 28) திங்கட்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ இலங்கையில் தமிழர் தன்னாட்சி உரிமை புறக்கணிப்பு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை

🗞️ அரியலூர்,தஞ்சை,நாகை,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

🗞️ கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், த.வெ.க. தலைவர் விஜயிடம் சிபிஐ இன்று விசாரணை

🗞️ பொருளாதாரத்தில் நாம் வளர்கின்ற அதே நேரத்தில் நம்முடைய மொழியும்,கலாச்சாரத்தையும்,பண்பாட்டையும் மறந்து விடக்கூடாது-துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

🗞️ சட்டமன்ற தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி தமிழகம் வருகிறார்

🗞️ அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்

🗞️ கறிக்கோழி வளர்ப்புக்கு கூலி உயர்வு கோரி உற்பத்தி நிறுத்தம் 12-வது நாளாக தொடர்கிறது

🗞️ நிதிப் பகிர்வை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசுக்கு கேரள அரசு கடும் கண்டனம்

🗞️ 18 சேர்க்கைக்கோள்களை சுமந்தபடி பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது-இஸ்ரோ

🗞️ நியூசிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

🗞️ அதிவேகமாக 28 ஆயிரம் ரன்களைக் கடந்து சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

4
149 views