logo

தமிழ்நாட்டில் மீண்டும் சாதி தீண்டாமை அதிகாரிகள் சாதி பார்த்து வேலை செய்வதாக திருவாலங்காடு அம்பேத்கர் நகர் கிராம மக்கள் குற்றச்சாட்டு



திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அம்பேத்கர் நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பாதாள சாக்கடை சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திருவாலங்காட்டில் அரசு சக்கர ஆலை காலி நிலம் வழியாக சென்று ஏரியில் கலந்து விடப்பட்டிருந்தது சமீபத்தில் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் அந்த நிலத்தின் வழியாக சாக்கடை தண்ணீர் செல்லக்கூடாது என்று அதற்கு தடை விதித்துள்ளார். பாதாள சாக்கடை செல்லும் வழியில் தடுப்பு சுவர் எழுப்பி உள்ளார் இதன் பின்னர் பல வீடுகளில் சாலைகளில் பாதாள சாக்கடை தண்ணீர் குளம் போல் தேங்கி காட்சியளித்தன இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கிராம பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர் அதன் பேரில் திருத்தணி வட்டாட்சியர் வருவாய் அதிகாரிகள் ஆய்வு செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார் ஆய்வின் போது சுமார் 26 அடி சாலை ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் திருத்தணி வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தேதி 29/09/2025 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார் ஆனால் சுமார் மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம் திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி பிரபவாதி அவர்கள் மாவட்ட ஆட்சியர் இடம் சென்று புகார் அளித்து அது வட்டாட்சியர் தலைமையில் ஆக்கிரமிப்பு ஆளர்களுக்கு அறிவிப்பு கொடுத்தும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருக்கும் காரணத்தினால் சாக்கடை தண்ணீர் அனைத்தும் வீடுகளில் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சாலையில் நடமாட முடியவில்லை ஆக்கிரமிப்புகளை அகற்றாத காரணத்தினால் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ரவி என்ற நபரை அவசர உதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கூட குறுகிய வழி என்பதால் திரும்ப முடியாத அவல நிலையில் உள்ளோம் இதனால் நோயாளிகளை சிறிது தூரம் நாங்களே தூக்கி வந்து அதன் பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றும் நிலை ஏற்பட்டுள்ளதால் இனி வரும் காலங்களில் ஆவது இப்பேற்பட்ட சங்கடமான சூழ்நிலைகள் எங்களுக்கு நிகழாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றியும் பாதாள சாக்கடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சமூக ஆர்வலர் ஜெயசங்கர் அவர்கள் கூறியதாவது நாங்கள் அன்று சேரியில் இருந்தோம் இன்று சாக்கடை துர்நாற்றத்தில் வாழ்கிறோம் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதாலே அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள் மற்ற சமூகம் என்றால் அரசியல் கட்சிகள் குரல் கொடுக்கும் ஆனால் சுதந்திரம் கிடைத்து 50 ஆண்டுகளாகியும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் எங்கள் வாக்கை தான் பெற்றுக் கொள்கிறார்களே தவிர எங்கள் வாழ்வாதாரத்திற்கு வழிவகுப்பதில்லை இன்னும் தீண்டாமை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது சில அதிகாரிகள் மூலம் திருவாலங்காடு வருவாய் ஆய்வாளர் மதுசூதனன் அவர்களை தொடர்பு கொண்ட போது அவர் நாகரிகமாக பதில் அளித்து அழைப்பை துண்டிக்கிறார் வட்டார வளர்ச்சி அலுவலர் தொடர்பு கொண்டால் அவர் எனக்கு இந்த அதிகாரம் இல்லை நீங்கள் எதுவாக இருந்தாலும் வட்டாட்சியர் வருவாய் கோட்டாட்சியரை சென்று பாருங்கள் என்று அலட்சியமாக பதில் அளிக்கிறார் வட்டாட்சியர் ஒரு உத்தரவுவிடுகிறார் வட்டார வளர்ச்சி அலுவலர் அதை மறுக்கிறார் பொதுமக்கள் யாரைத்தான் போய் பார்க்க வேண்டும் அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் இவ்வாறு சாக்குப் போக்குகளை சொல்லிக்கொண்டே இருந்தால் மக்களின் நிலை தான் என்ன மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு மதிப்பில்லையா கேட்க நாதியற்ற சமுதாயம் என்பதாலே இவர்கள் இவ்வாறு மாற்றி மாற்றி எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் எத்தனை ஆண்டு காலமாக இனியும் ஒரு போதும் நாங்கள் ஏமாற விரும்பவில்லை எங்களுக்கு உண்டான உரிமைகளை பறிக்கும் பட்சத்தில் மாபெரும் சாலை ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் கீழ் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் பொதுமக்களை இது போன்ற அலைகழிக்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விரைவில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்களையும் என் வாயிலாக கேட்டுக் கொள்கின்றேன் இவ்வாறு அவர் கூறினார் மேலும் களத்தில் ஆய்வுக்கு சென்றபோது அங்கே தேங்கி இருந்த சாக்கடை தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியும் அதிக அளவில் காணப்பட்டன அதை தொடர்ந்து சாலை இருபுறங்களிலும் சாக்கடை தண்ணீர் நீண்ட நாட்களாக தேங்கியிருப்பதால் பாசை பிடித்து உள்ளது அதில் பூச்சிகள் உற்பத்தி காணப்பட்டன இதனால் அங்கிருக்கும் மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து வட்டாட்சியர் தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை ஏற்க மறுத்து விட்டார் மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வுக்கு வந்த போது ஏதோ கடமைக்கு வந்தது போல் அவர் செயல்பாடுகள் இருந்தன விடியல் ஆட்சியில் யாருக்குத்தான் விடிவுகாலம் கிடைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி விடியல் கிடைக்கவில்லையே என புலம்பித் தள்கின்றனர் கிராம மக்கள் எது எப்படி இருந்தாலும் இனியாவது மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா என காத்திருந்து பார்ப்போம்.

35
2608 views