logo

விழுப்புரம் எஸ்பி சரவணனுக்கு அல்வா கொடுக்கும் காவல் ஆய்வாளர் வனஜா வளத்தி காவலர்கள் மீது மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனித உரிமை அத்துமீறல்

விழுப்புரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆக தற்போது சரவணன் அவர்கள் உள்ளார் இவருக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தில் காவல் ஆய்வாளர்கள் சிலரும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் சிலரும் சதி செயல் செய்வதாக தகவல் கிடைத்தது இது உண்மைதானா என்று ஆய்வு செய்து பார்த்தபோது சமீபத்தில் வளத்தி காவல் நிலையத்தில் 73 வயது மதிக்கதக்க கண்ணன் என்பவரையும் அவரது மனைவியையும் அதே கிராமத்தைச் சார்ந்த ராமதாஸ் என்பவர் சரமாரியாக தாக்கி உள்ளார் பின்னர் அவரது தந்தை கிருஷ்ணன் என்பவரை கண்ணன் மண்வெட்டி எடுத்து வெட்டியதாகவும் அதில் கிருஷ்ணனுக்கு காயம் ஏற்பட்டதாகவும் எதிர் தரப்பினர் புகார் அளித்துள்ளனர் இது குறித்து காவல் ஆய்வாளர் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் அண்ணன் தம்பி பிரச்சனை என்பதாகவும் அதில் தம்பி கிருஷ்ணன் என்பவர் அண்ணன் நிலத்தில் உழுது கொண்டிருந்த போது சென்று அவர் பங்கு கேட்டதாகவும் அப்போது தகராறு நடந்துள்ளதாக கூறினார் மேலும் ராமதாஸ் என்பவர் நல்லவர் என்றும் அவரைப் பற்றி எதுவும் செய்தி போட வேண்டாம் திருமணம் கூட ஆகவில்லை என்றார் ஒரு காவல் ஆய்வாளர் ஏன் இவ்வளவு எதிர் மனுதாரர் ராமதாசுக்கு பரிந்துரை செய்கிறார் என பல சந்தேகங்கள் எழுந்தன இதைத் தொடர்ந்து கிராமத்தில் உள்ள பலரை தொடர்பு கொண்டு கேட்டபோது ராமதாஸ் மீது பல்வேறு வழக்குகள் நிலைமையில் உள்ளன இதுவரையிலும் ஒரு முறை கூட காவல்துறை அவரை கைது செய்ததில்லை அதே போன்று அவர் மீது பல பெண்கள் பாலியல் சீண்டால் செய்ததாக புகார்கள் உள்ளன என்றும் கிராமத்தில் பலர் ராமதாஸ் மீது புகாரை கொடுப்பதை நிறுத்திவிட்டனர் காவலர்கள் முழுக்க முழுக்க ராமதாஸ் என்ற நபருக்கு கைக்கூலியாக தான் செயல்படுகிறார்கள் நாங்கள் புகார் அளித்தால் எங்கள் மீது கரை வைத்து போலி வழக்குகள் பதிவு செய்கிறார்கள் பல்வேறு வழக்குகள் இருந்தும் அவரை கைது செய்யவே முடியாது என்கின்றனர் காவல்துறை இதில் செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் முதல் உயர் அதிகாரிகள் வரை தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது கஞ்சா கட்டப்பஞ்சாயத்து கந்துவட்டி பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களிடம் ஆபாச வார்த்தைகள் பேசுவது என சிறிய தாதாவாகத்தான் வளம் வருகிறார் ராமதாஸ் இப்படி இருக்க பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் அஞ்சுகிறோம் அடுத்து என்ன செய்வானோ என்று இவ்வாறு இருக்க அவனுக்கு எப்படி திருமணம் நடக்கும்? யார் பெண் கொடுப்பார் என்கின்றனர் கிராம பொதுமக்கள் மேலும் இது சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் புகாரின் விவரங்களை அனுப்புமாறும் அதை பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் இதைத்தொடர்ந்து செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜ் இதற்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்றவியல் பிரிவி டிஎஸ்பியாக பணிபுரிந்துள்ளார் பின்னர் அக்டோபர் மாதம் செஞ்சியில் பொறுப்பேற்றுள்ளார் DSP தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் எதிர்மனுதாரருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது இது பொய் வழக்கு என எவ்வாறு நீங்கள் கூற முடியும் என்றார் இதற்கு பாதிக்கப்பட்ட முதியவர் கண்ணனிடம் நாம் கேட்டபோது அவர் கூறியதாவது எனது தம்பியின் மகன் தான் ராமதாஸ் அவனுக்கு எங்கள் வீட்டில் தான் மூன்று வேலை சாப்பாடு கொடுத்தோம் அவன் கை செலவுக்கு பணம் கொடுத்தோம் ஆனால் தற்போது அவன் திருமணம் செய்து கொள்ளாமல் பல ஆண்டுகளாக ஊதாரியாக சுற்றி வருகிறான் மேலும் பல பெண்களிடம் தவறான செயல்களில் ஈடுபடுகிறார் இதையெல்லாம் நான் தட்டி கேட்டதற்கு என் மேல் ஆத்திரம் கொண்டு என்னிடம் பலமுறை சொத்தை எழுதிக் கொடுக்கக் கோரி மிரட்டினான் அது மட்டும் இன்றி நான் இல்லாத போது என் மனைவியை ஏமாற்றி என் வீட்டில் இருந்து எனது சில சொத்து சம்பந்த ஆவணங்களை திருடி சென்று விட்டான் அது மட்டும் இன்றி எனது அத்தை கண்ணம்மாள் 95 வயது
அவர்களிடம் வெள்ளை பேப்பரில் கைநாட்டு வைத்துக் கொண்டு அவருடைய சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் வளத்தி துணை பதிவாளாக வளாகத்தில் சென்று பதிவு செய்ய முயன்றான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அப்போது பதிவாளர் இது நீதிமன்றத்தில் தடை ஆணையில் உள்ள சொத்து ஆகையால் பதிவு செய்ய முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டார் அவன் கேட்கும் சொத்தானது எனது மனைவியின் சொத்து ஆகும் நான் அவனுக்கு கொடுக்க வேண்டிய அனைத்தையும் சரியான முறையில் பாகப்பிரிவினை செய்து கொடுத்து விட்டேன் ஆனாலும் காவல்துறையிடம் எனக்கு சொத்து கொடுக்கவில்லை அதைக் கேட்கப் போனால் என்னை அடிக்க வராரு எங்க பெரியப்பா என்கின்றான் நான் யாதவர் சமுதாயத்தில் கிருஷ்ணரை வழிபாடு கொண்டிருக்கின்றேன் மேலும் புத்த ஸ்தானம் எடுத்துள்ளேன் ஆகையால் அசைவமே உண்ண மாட்டோம் ஆபாச வார்த்தைகளையும் பேச மாட்டேன் அப்படி இருக்க மண்வெட்டி எடுத்து எவ்வாறு நான் என் தம்பியை காதை வெட்டுவேன் சிறிது கூட காவல்துறை இதை சரி பார்க்காமல் அவன் கொடுத்த புகார் என்று கூறி என் மீது என் மனைவி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் என்று கண்ணீர் வடிக்கின்றார் முதியவர் கண்ணன் எது எப்படி இருந்தாலும் காவல்துறை ஒருதலை பச்சமாக செயல்பட்டு உள்ளது என்பதற்கு பல ஆதாரங்கள் நமக்கு கிடைத்துள்ளது ஒரு நபர் அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போதிலும் மருத்துவமனைக்குச் சென்று கண்ணனிடம் காவல்துறை விசாரணை நடத்தாதது ஏன் 10 நாட்களுக்கு மேலாக கண்ணன் மருத்துவமனையில் இருக்க கண்ணனிடம் எந்த காவல்துறையும் அதிகாரியும் செல்லாததா காரணம் என்ன காவல் ஆய்வாளர் வனிஜா ராமதாஸிற்கு வக்காலத்து வாங்குவது ஏன் டிஎஸ்பி நாங்கள் நேர்மையாக தான் புலன் விசாரணை செய்தேன். என்று எவ்வாறு கூறுகிறார் யாரை விசாரித்தார் எங்கு சென்று மக்களை சந்தித்தார் இதெல்லாம் பார்க்கும்போது விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பது அனைத்தும் மர்மமாக உள்ளது இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரிந்தே தான் நடக்கிறதா அல்லது அவரை கண்ணில் தூசி தூவி விட்டு சிலர் தனி ராஜாங்கம் நடத்துகிறார்களா என சமூக ஆர்வலர்கள் சரமாரி குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர்.

48
3558 views