logo

சாலையில் கடந்த வெள்ளி கொலுசு காவல்துறையிடம் ஒப்படைத்த செய்தியாளர் மோகன கிருஷ்ணன்

சாலையில் கடந்த வெள்ளி கொலுசு காவல்துறையிடம் ஒப்படைத்த செய்தியாளர் மோகன கிருஷ்ணன்


திருவள்ளூர் மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் அருகில் தேநீர் கடை முன்புறம் சாலையில் சுமார் 10,000 மதிப்பு மிக்க வெள்ளி கொலுசு ஒன்று இருந்துள்ளது அந்த வழியாக சென்று கொண்டிருந்த தேசிய சட்ட நிதி இயக்கத்தின் தலைவரும் & நான்கு திசை விடியல் தலைமை நிருபர் தகவல் டுடே தலைமைச் செயலக சிறப்பு செய்தியாளர் மோகன கிருஷ்ணன் அதை பார்த்துள்ளார் எடுத்து அக்கம் பக்கத்தில் கடைகளில் விசாரித்துள்ளார் யாரும் தெரியவில்லை என்று கூறியவுடன் திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளரிடம் உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கொலுசை வழங்கியுள்ளார் அப்போது காவல் ஆய்வாளர் அந்தோணி ராஜ் அவர்கள் கூறியதாவது இன்றைய காலகட்டத்தில் கொள்ளை சங்கிலி பரித்தல் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சாலையில் கிடந்த பொருளை கொண்டு வந்து கொடுப்பதற்கு தைரியமும் நல்ல மனம் வேண்டும் தேவையில்லாமல் சிலர் அடுத்தவர்களின் பொருள்கள் மீது ஆசைப்பட்டு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு அதன் பின்னர் அவர்களின் வாழ்க்கையே வீணாக தொலைத்துக் கொள்கின்றனர் அடுத்தவர் பொருட்கள் மீது எப்போதும் ஆசை கொள்ளக் கூடாது இது போன்று சாலையில் கிடைக்கும் பொருட்களை உரிய காவல் நிலையங்களில் கொடுப்பது நல்லது தவறவிட்ட பெண் யார் என்பதை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து உரிய நபரிடம் கொலுசை வழங்கப்படும் என்றார் பொதுமக்கள் யாருக்கேனும் சாலை விலை உயர்ந்த பொருட்களோ அல்லது பணமோ கிடைத்தால் உரிய காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்கின்றனர் காவல்துறை அதே போன்று நீதிமன்றம் அருகே தவறவிடப்பட்ட அந்த பெண் கொலுசானது காவல் நிலையத்தில் உள்ளதால் அதற்குரிய நபர் வந்து அதை வாங்கி செல்லுமாறு கூறுகின்றனர் சமீபத்தில் திருத்தணி முருகர் கோவிலில் விலை உயர்ந்த பொருட்களை தவறவிட்ட நிலையில் இரண்டு குழந்தைகள் அதை காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர் அது பெரும் பேசும் பொருளாக மாறியது அதன் பின்னர் அவர்களுக்கு வெகுமதியும் பாராட்டு சான்றிதழ்களும் காவல்துறை உயர் அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டது இது போன்ற செயல் செய்யும் பொது மக்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்

10
976 views