logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 20/11/2025.

20/11/2025 வியாழக்கிழமை (ஐப்பசி4)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை ஒன்றிய நிராகரித்திருப்பது பழிவாங்கும் செயல்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗞️ வேளாண் பாடத்திட்டத்தில் இயற்கை விவசாயத்தை கொண்டு வர வேண்டும் மோடி வலியுறுத்தல்

🗞️ வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

🗞️ சபரிமலையில் இதுவரை மூன்று லட்சம் பக்தர்கள் தரிசனம்

🗞️ கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி மனு

🗞️ திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- கோவில் நிர்வாகம்

🗞️ மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கிய ஒன்றிய அரசுக்கு திமுக கூட்டணி சார்பில் இன்று கோவையில் ஆர்ப்பாட்டம்

🗞️ எஸ்.ஐ.ஆர். வாக்குத் திருட்டால் வாக்கை உறுதி செய்யுங்கள்-பிரேமலதா விஜயகாந்த்

🗞️ மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு கெடு விதித்த விவகாரம் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

🗞️ பீகார் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் நிதிஷ்குமார்

🗞️ இந்தியாவுக்கு தனது ஐந்தாம் தலைமுறை ஸ்டீல்த் போர் விமானமான SU- 57 தொழில்நுட்ப பரிமாற்றத்தை வழங்க தயாராக உள்ளது-ரஷ்யா

🗞️ மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் இன்று மூடல்

🗞️ அமெரிக்காவுக்கு பயந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது குறைப்பு-காங்கிரஸ் குற்றச்சாட்டு

15
1678 views