
லஞ்ச ஒழிப்புத்துறை பார்வை சற்று திருவள்ளூர் மாவட்ட பக்கம் திரும்பும் ஊழலில் சிறந்த முதல் மாவட்டமாக திகழும் திருவள்ளூர்
லஞ்ச ஒழிப்புத்துறை பார்வை சற்று திருவள்ளூர் மாவட்ட பக்கம் திரும்பும் ஊழலில் சிறந்த முதல் மாவட்டமாக திகழும் திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான பல்வேறு புகார்களை முன்வைக்கின்ற பொது மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாரந்தோறும் திங்கட்கிழமை நடத்தப்படும் முதலமைச்சர் தனிப்பிரிவில் பல மணி நேரம் கால் கடக்க காத்திருந்து புகார்கள் அளித்தாலும் அதற்கு உண்டான நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை என்கின்றனர் பொதுமக்கள் எதற்கெடுத்தாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று பார்க்க வேண்டிய அவல நிலைகள் ஏற்பட்டுள்ளது வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரடியாக சந்திக்க முடிவதில்லை என்கின்றனர் இதில் திருத்தணி வட்டாட்சியர் குமார் அவர்களை சந்திக்க பொதுமக்கள் செல்லும்போதெல்லாம் அவரது உதவியாளர் அவரை பார்க்க முடியாது என தடுத்து நிறுத்தி வைப்பதாக மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன் என்பவர் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது 2022 ஆம் ஆண்டு அவருடைய நிலத்தை சர்வே எண் 134 என்ற இடத்தை அளப்பதற்காக நில அளவுத் கட்டணத் தொகை அரசு கணக்கில் முறையாக செலுத்தி நிலத்தை அளப்பதற்கு மனு அளித்துள்ளார் மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை அவருடைய நிலத்தை அளக்கவில்லை என்றும் ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்த பின்பும் நடவடிக்கை எடுப்பதாக வாய்மொழி உத்தரவு கூறுகிறாரே தவிர செயல்பாட்டில் இல்லை என்கின்றார் அதேபோன்று இது சம்பந்தமாக திருத்தணி வட்டாட்சியரை பல நாட்களாக சந்திக்க முயன்ற போதிலும் அவர் மாவட்ட ஆட்சியர் உடன் வீடியோ கான்பரன்ஸ் இருப்பதாகவும் சிறந்த கலந்தாய்வுக் கூட்டம் இருப்பதாகவும் சாக்குபோக்கு சொல்லி பொதுமக்களை சந்திப்பதே இல்லை என குமருகின்றார் சமீபத்தில் செய்தி காணொளியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதீப் அவர்கள் நில அளவு அதிகாரி ஒருவரை சரமாரியாக கேள்வியை கேட்டிருப்பார் காலையிலே நிலத்தை அளந்து அத்து காண்பிப்பதற்காக நில அளவு அதிகாரி சென்று விட்டதாகவும் இவ்வளவு சீக்கிரம் நீங்கள் வேலைக்கு சென்று உங்கள் பணியை தொடங்கினால் நாடு என்றோ முன்னேறி இருக்குமே என்று அந்த காணொளியில் இருக்கும் ஆனால் நில அளவு அதிகாரிகள் மூன்று ஆண்டுகள் இரண்டு ஆண்டுகள் ஆனாலும் செல்வதில்லையா என கேள்விக்குறி ஆகியுள்ளது இனிமேலாவது திருத்தணி வட்டாட்சியரை பொதுமக்கள் சந்திக்க முடியுமா மாவட்ட ஆட்சியர் இடத்தில் புகார் அளித்தால் அதற்குரிய நடவடிக்கை இருக்குமா என சமூக ஆர்வலர்கள் புலம்பித் தள்கின்றனர் அது எல்லாம் எப்போதுதான் எங்களுக்கு விடிவு காலம் வரும் என்று கண்ணீர் வடிக்கின்றனர் பொதுமக்கள் மக்கள்