logo

கும்மிடிப்பூண்டி தொகுதி சீத்தஞ்சேரியில் மோடி அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி சீத்தஞ்சேரி பஜார் பகுதியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று மோடி அரசை கண்டித்து தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் அறிவிப்பின்படி கும்முடிபூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜ் ஆலோசனையின் படி பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி கே சந்திரசேகர் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் பொன்னுசாமி தலைமையில் 100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி ரூ.4000 கோடியை தமிழ்நாட்டிற்குத்தராமல் ஏழை எளியோர் வயிற்றில் அடிக்கும் மோடி அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் பாக முகவர்கள் (BLA -2). முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநி திகள் கழக முன்னோடிகள் கிளை கழக செயலாளர்கள் பிரதிநிதிகள் நிர்வாகிகள், பொதுமக்கள் என பல கலந்து கொண்டு மோடி அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

43
1689 views