logo

தேனி மாவட்ட சிலம்பாட்ட கழக கூட்டம்

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் கிளை, தேனி மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் சார்பாக கம்பம்-புதுப்பட்டி மனமகிழ் மன்றத்தில் தேனி மாவட்ட சிலம்பாட்டம் கழக கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் T.V.சிவாஜி மோகன் தலைமை தாங்கினார். செயலாளர் R.P.முருகேசன், பொருளாளர் P.S.M.முருகன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எதிர்வரும் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

சிலம்ப ஆசான்கள் தேனி சிலம்பம் பாண்டி, சின்னமனூர் சிலம்பம் ரத்தினவேல் பாண்டியன், கோம்பை பிரசன்னா, மனோஜ், மதுரை சாம் புதுப்பட்டி S.ஆசிக் அகமது, ராமசந்திரபுரம் சேதுபதி மற்றும் பல்வேறு பல்கலைச் சேர்ந்த மாவட்ட ஆசான்கள் கலந்து கொண்டனர்.

6
1439 views