logo

தமிழ்நாடு - தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சியின் மெத்தனப் போக்கினால் நோய் பரவும் அபாயம்???

தேனி மாவட்டம் தேனி - அல்லிநகரம் நகராட்சியின் மெத்தனப் போக்கினால் நோய்கள் பரவுகின்ற அபாயம்! தேனி VPS மில் தெரு திட்டச் சாலையில் அமைந்துள்ள மீட்டிங் ஹாலின் அருகில் நகராட்சி மூலம் குப்பைக் கழிவுகளை மொத்தமாக சேகரித்து, அதன்பின் ஓரிரு நாட்களில் இந்த குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பகுதியை சுற்றி உள்ள கோழிகள் மற்றும் மீன் இறைச்சி கழிவுகளையும் இங்கே கொட்டி வருவதால், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைக் கழிவுகளை மேலோட்டமாக அள்ளிவிட்டு, அந்த இடத்தை அப்படியே விட்டு விடுகின்றனர்.... இதனால் இந்த இடத்தில் இருந்த மீன், கோழிகளின் கழிவுகள் அழுகி ஊனாய் வழிந்து அவ்விடத்தில் தேங்கி இந்த பகுதியே மிகவும் துர்நாற்றம் வீசுகிறது.... அந்த பகுதி வழியாக செல்லும் நபர்கள் மூக்கை மூடிக் கொண்டு செல்லும் அவலம்!!! இது இப்படியே சென்றால் நகராட்சியால் பொதுமக்களுக்கு இலவசமாக நோய்களை கொடுக்கும் அவலம்!!! இவற்றை உடனடியாக நகராட்சி சுகாதார நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்!!!............................................................ ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

134
4102 views