சமூக தாகம் இன்றைய செய்திகள் 02/12/2025..
2/12/2025 செவ்வாய்க்கிழமை (கார்த்திகை 16)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
🗞️ அக்டோபரில் பெய்த மழையால் சேதமடைந்த 4.235 ஹெக்டேர் பயிர் சேதங்களுக்கு நிவாரணம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
🗞️ சென்னைக்கு மிக அருகில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
🗞️ 'ஆளுநர் மாளிகை தமிழ்நாடு' என்பது "மக்கள் மாளிகை தமிழ்நாடு"என பெயர் மாற்றம்
🗞️ வீடுகள் சேதம், உயிரிழப்புகளுக்கான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
🗞️ இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகம்,அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
🗞️ எஸ்.ஐ.ஆர். பற்றி விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம்
🗞️ பழனிச்சாமி பெரிய தலைவர் அல்ல, அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை-செங்கோட்டையன்
🗞️ திருவண்ணாமலை தீபத்தை முன்னிட்டு கார்த்திகை தீபம் செயலி அறிமுகம் அமைச்சர் எ.வ.வேலு
🗞️ இந்திய கடற்படை தினத்தையொட்டி கேரளாவில் ஒத்திகை