
“முதல்வர் முன்னிலையில் எழுந்த கேள்விக்கும் பதில் இல்லை – தாம்பரம் பள்ளிவாசல் கோப்பு மர்மம்!”
தாம்பரம் மாநகராட்சி : கஸ்தூரிபாய் நகர் பள்ளிவாசல் அனுமதி கோப்பு ஒரு வருடமாக முன்னேற்றமின்றி – ஜமாத் தரப்பு கேள்வி
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கஸ்தூரிபாய் நகர் இஸ்லாமிய சுன்னத்துல் ஜமாத் பள்ளிவாசலுக்கு நிரந்தர அனுமதி பெற கடந்த ஒரு வருடமாக ஜமாத்தார் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை எந்த முடிவும் காணவில்லை என ஜமாத் தரப்பு தெரிவித்துள்ளது.
பள்ளிவாசல் ஒரு வருடமாக செயல்பட்டு வருகிறதாலும், அவசியமான அதிகாரப்பூர்வ அனுமதிகள் வழங்கப்படாத நிலையில், நிர்வாக துறைகளின் நீண்டகால மௌனம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
---
மூன்று முறை மனு – இரண்டு முறை மாவட்ட ஆட்சியரின் நினைவூட்டல்
ஜமாத்தார் வழங்கிய தகவல்படி:
பள்ளிவாசல் அனுமதி கோரிக்கையாக மூன்று முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்,
இரண்டு முறை,
தாம்பரம் மாநகராட்சி, RDO, மற்றும் காவல் துறைக்கு
“கோப்பின் நிலை அறிக்கையை அனுப்பவும்”
என நினைவூட்டும் கடிதங்களை அனுப்பியுள்ளார்.
சமீபத்தில் அனுப்பப்பட்ட கடிதம்,
“தலைமைச் செயலாளர் கேட்டிருப்பதால் உடனடி நிலை அறிக்கை வழங்குக”
எனும் குறிப்புடன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் எந்த துறையிலிருந்தும் பதில் இல்லை என குறிப்பு
ஜமாத் தரப்பின் கூற்றுப்படி,
மாநில நிலை அதிகாரிகளின் கடிதம் வரை சென்றிருந்த போதிலும்,
தாம்பரம் மாநகராட்சி, RDO, மற்றும் காவல் துறை – எதுவும் மாவட்ட ஆட்சியருக்கு பதில் அனுப்பவில்லை.
---
அரசியல் தரப்பு ஆதரவு இருந்தும் முன்னேற்றம் ஏன் இல்லை?
ஜமாத் தரப்பின் தகவலின்படி:
மாநில அரசின் மூன்று அமைச்சர்கள் பள்ளிவாசலுக்கு ஆதரவாக பரிந்துரை செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தமிழக சட்டமன்றத்தில்,
முதல்வர் முன்னிலையில்
இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் எழுப்பப்பட்டுள்ளது.
இவ்வளவு மட்டங்களிலான நடவடிக்கைகள் இருந்தும்,
தாம்பரம் மாநகராட்சி சார்பில் எந்த பதிலும் கிடைக்காதது எப்படி?
என்று ஜமாத் தரப்பு கேள்வி எழுப்புகிறது.
---
‘17 எதிர்ப்பு மனுக்கள் வந்துள்ளதாக தகவல்’ – இதுவே தாமதத்திற்கு காரணமா?
‘17 எதிர்ப்பு மனுக்கள் ஒரே அரசியல் குழுவைச் சேர்ந்தவர்களிடமிருந்து வந்தவை’ – ஜமாத் தரப்பு
ஜமாத் தரப்பு, சமூக ஊடகங்களில் மற்றும் உள்ளூர் தகவல் வட்டாரங்களில்
“பள்ளிவாசல் அனுமதி வழங்கக்கூடாது” எனக் கூறி 17 எதிர்ப்பு மனுக்கள் வந்துள்ளன
என்று கூறப்படுவதால், கோப்பு தாமதத்திற்கு இதுவே ஒரு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளது.
அத்தகைய மனுக்கள் உண்மையா?
அவை எந்த அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டவை?
அவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதா?
என்ற கேள்விகளுக்கும் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளிவரவில்லை.
---
ஜமாத் தரப்பு எழுப்பும் முக்கிய கேள்விகள்
நிர்வாக மௌனத்தை முன்னிட்டு, ஜமாத் அமைப்பு பின்வரும் கேள்விகளை முன்வைக்கிறது:
தாம்பரம் மாநகராட்சி, தமிழ்நாட்டு அரசின் நிர்வாக அமைப்புக்குள் செயல்படுகிறதா?
மாவட்ட ஆட்சியரின் இரண்டு நினைவூட்டல் கடிதங்களுக்கும் ஏன் பதில் வரவில்லை?
தலைமைச் செயலாளர் கேட்ட கோப்பிற்குப் கூட பதில் அளிக்கப்படாதது எப்படி?
ஒரு சாதாரண அனுமதி கோப்பு ஒரு வருடமாக நிலுவையில் இருக்க காரணம் என்ன?
எந்த அதிகாரத்தரப்பில் கோப்பு தடைபட்டு உள்ளது?
---
அதிகாரப்பூர்வ பதில் இன்னும் இல்லை
இந்த விவகாரம் தொடர்பாக
தாம்பரம் மாநகராட்சி,
RDO அலுவகம்,
காவல் துறை
எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வழங்காத நிலையில்,
கோப்பு தாமதத்திற்கு உள்ள காரணங்கள் என்ன என்பதற்கான விளக்கம் அரசு தரப்பில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.