சமூக தாகம் இன்றைய செய்திகள் 02/11/2025.
2/11/2025 ஞாயிற்றுக்கிழமை (ஐப்பசி 16)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ கொடநாடு கொலை,கொள்ளை வழக்குகளில் எடப்பாடி தான் ஏ1 குற்றவாளி-செங்கோட்டையன்
🗞️ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்ப்பது குறித்து இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
🗞️ தமிழ்நாட்டில் வாழ்வது பெருமையாக உள்ளது மோடிக்கு பீகார் தொழிலாளர்கள் பதிலடி
🗞️ வரும் 5-ம் தேதி சென்னையில் கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
🗞️ தமிழ்நாட்டில் 7-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்-வானிலை மையம் கணிப்பு
🗞️ மாநிலங்களின் வளர்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதே பாஜக அரசின் மந்திரம்-பிரதமர் மோடி
🗞️ சி.எம்.எஸ்-03 செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம். எம்-5 ராக்கெட்
🗞️ பணயக் கைதிகளின் உடல்களை மாற்றி ஒப்படைத்ததாக ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு
🗞️ சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரில் இன்று இறுதிப் போட்டி
🗞️ மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்திய- தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை